உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாட்டவயல் பகுதியில் விரட்டிய யானையிடம் உயிர் தப்பிய பயணி

பாட்டவயல் பகுதியில் விரட்டிய யானையிடம் உயிர் தப்பிய பயணி

பந்தலுார்;தமிழக எல்லை பகுதியான, பாட்டவயல் பகுதியில் பைக்கில் சென்றவர் யானையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பந்தலுார் அருகே, பாட்டவயல் சோதனை சாவடி, மாநில எல்லையில் உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில், ஒற்றை யானை காலை நேரத்தில், சாலையில் உலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. நேற்று காலை, 7:00 மணிக்கு சாலையில் உலா வந்த நிலையில், சுல்தான் பத்தேரி பகுதியில் இருந்து பாட்டவயல் நோக்கி பைக்கில் வந்த ஒருவர் யானையின் எதிரே வந்துள்ளார். அவரை பார்த்த யானை துரத்தி சென்ற நிலையில், சுதாரித்த அந்த நபர் சட்டென பைக்கை திருப்பி வேகமாக சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் 'வீடியோ' சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வனத்துறையினர் கூறுகையில்,'இந்த சாலையில் யானைகள் நாள்தோறும் உலா வருவதால், இப்பகுதியில் வாகனங்களை இயக்கி வருபவர்கள் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி