மேலும் செய்திகள்
ஊட்டி பூண்டு விலை சரிவு: கிலோ ரூ.80க்கு விற்பனை
51 minutes ago
கூடலுாரில் நோய் தாக்குதலால் பாக்கு மகசூல் பாதிப்பு
2 hour(s) ago
சாலையோர நீர்வீழ்ச்சி; வனத்துறை எச்சரிக்கை
2 hour(s) ago
மழையால் படகு சவாரி நிறுத்தம்
2 hour(s) ago
கூடலுார : நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியில் பூர்வகுடிகளான பணியர், குறும்பர், காட்டுநாயக்கர் இன பழங்குடி மக்கள் வனம் சார்ந்த குக்கிரமங்களில் வசித்து வருகின்றனர்.நாகரிக மாற்றத்தால், இன்றைய இளைய தலைமுறையினர் இடையே பாரம்பரியமான உடைகள், காதணிகள் அணிவதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரியமான பொருட்கள் அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.இப்பகுதியில் இயற்கையாக கிடைக்கும் தாளஞ்செடி இலைகளை பதப்படுத்தி, வட்ட வடிவிலான காதோலையை உருவாக்குகின்றனர். அதன் வெளிப்பகுதியில் கருகமணி பதித்த கம்மலை பெண்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் அளவு காதுகளின் துளைக்கு ஏற்ப மாறுபடும்.ஆனால், இன்றைய இளைய தலைமுறை பழங்குடி பெண்கள், காலத்துக்கு ஏற்ப உடை மற்றும் காதணிகளை அணிய துவங்கி உள்ளனர். இவர்கள், காதோலைகள் அணிவதை விரும்புவதில்லை. இதனால், பாரம்பரியமான காதோலைகளை முதியவர்கள் மட்டும் அணிந்து வருகின்றனர்.இவர்களின் காலத்துக்கு பின், பாரம்பரியமான காதோலை என்பது, காட்சிப் பொருளாக மட்டுமே பார்க்கும் சூழல் உள்ளது.பழங்குடியின பெண்கள் கூறுகையில், 'இன்றைய கால மாற்றத்தால், எங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்கள் காதோலை அணிவதை விரும்புவதில்லை. எங்கள் காலத்துக்கு பின் பாரம்பரியமான காதோலை பயன்பாடும் அழிந்து விடும் என்பது வருத்தமாக உள்ளது' என்றனர்.
51 minutes ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago