உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மருத்துவ முகாமில் பழங்குடியினர் பயன்

மருத்துவ முகாமில் பழங்குடியினர் பயன்

கூடலுார்: முதுமலையில் நடந்த மருத்துவ முகாமில் பழங்குடியினர் உட்பட பலரும் சிகிச்சை பெற்றனர். முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாம் பயிற்சி மையத்தில், பழங்குடியின போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவின், 150 பிறந்த நாளை முன்னிட்டு வனத்துறை, வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமில் புற்றுநோய், காசநோய், எலும்பு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. வன ஊழியர்கள் பழங்குடியினர் உள்ளிட்ட மக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். முகாமில் பங்கேற்ற பழங் குடியின மக்களுக்கு தனி நபர் சுகாதார பெட்டி, பள்ளி மாணவர்களுக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்பட்டது. முகாமில், முதுமலை துணை இயக்குனர் கணேசன், முதுநிலை ஆராய்ச்சி யாளர் சந்திரசேகர், திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர்கள், இந்தியன் புற்றுநோய் மையம் டாக்டர் சுமதி மற்றும் வன அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ