உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சல்லிவன் நினைவு தினம் ஊட்டியில் அஞ்சலி நிகழ்ச்சி

சல்லிவன் நினைவு தினம் ஊட்டியில் அஞ்சலி நிகழ்ச்சி

ஊட்டி, ;ஊட்டியில் ஜான் சல்லிவன் நினைவு தினத்தை ஒட்டி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.ஊட்டியை, 200 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்த ஆங்கிலேயர் ஜான் சல்லிவன், இதனை நவீன பகுதியாகவும்; சுற்றுலா மையமாகவும் மாற்ற காரணமாக அமைந்தார். ஊட்டியின் முதல் கலெக்டரான இவர் கட்டிய முதல் கட்டடம் தற்போது அரசு கலை கல்லுாரியாக இயங்கி வருகிறது.இவரின் நினைவாக தாவரவியல் பூங்கா சாலையில், 'ஊட்டி-200' விழாவின் போது சிலை அமைக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில், ஜான் சல்லிவனின், 170வது நினைவு தினத்தை ஒட்டி, அவரின் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.அதில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பங்கேற்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை