மேலும் செய்திகள்
போதை மாத்திரை பதுக்கிய 4 பேர் கைது
08-Aug-2025
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார், வட்டம்பலம் பகுதியில் இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் சந்தேகிக்கும் வகையில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 13 கிராம் கொண்ட எம்.டி.எம்.ஏ., என்ற போதை மாத்திரை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, காரில் இருந்த மலப்புரம் மாவட்டம், கரிங்கல்லத்தாணி பகுதியைச் சேர்ந்த பைசல், 34, மண்ணார்க்காடு கோட்டோப்பாடம் பகுதியைச் சேர்ந்த முகமதுவசீம், 21, ஆகியோரை கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
08-Aug-2025