உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வனத்துறைக்கு எதிராக தகவல் பரப்பிய இருவர் கைது

வனத்துறைக்கு எதிராக தகவல் பரப்பிய இருவர் கைது

கூடலுார்; வனத்துறை குறித்து பொய்யான தகவல்களை, சமூக வலைதளங்களில் வெளியிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். கூடலுார் பாடந்துறை பகுதியில், செயல்பட்டு வரும் 'வாட்ஸ்-அப்' குழுவில்,யானைகள் நடமாட்டம், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம், வனத்துறையினர் நடவடிக்கை குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், அதில் வனத்துறை குறித்து பொய்யான தகவல்களை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அவதுாறு பரப்பிய குழுவின் 'அட்மின்கள்' இருவர் மீது வனத்துறை சார்பில், தேவர்சோலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, பாடந்துறை சசி,45, ரின்ஷாத்,35, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை