உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கார் கண்ணாடி உடைப்பு இருவர் கைது

கார் கண்ணாடி உடைப்பு இருவர் கைது

கூடலூர்: கூடலூரில், புலியை சுட்டு பிடிக்க வலியுறுத்தி நடந்த வேலை நிறுத்தத்தின் போது, சுற்றுலா கார் கண்ணாடியை உடைத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கூடலூர் அருகே, இருவரை தாக்கி கொன்ற புலியை பிடிக்க வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகள் பொது நல அமைப்புகள் சார்பில், 48 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டம், 27, 28ம் தேதிகளில் நடந்தது. இதில், 27ம் தேதி, கூடலூரில் இருந்து கேரளா நோக்கி சென்ற, சுற்றுலா கார் மீது, கோழிக்கோடு சாலை, இரும்புபாலம் அருகே மர்ம நபர் கல் வீசி கண்ணாடியை உடைத்தனர். அதில், பயணித்த 12, வயது சிறுமி காயமடைந்தார். கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். கூடலூர் தர்மகிரியை சேர்ந்த சிபு, 46, சளிவயலை சேர்ந்த ரஞ்சித், 36, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை