உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இரு சக்கர ரோந்து வாகனம் இயக்கம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இரு சக்கர ரோந்து வாகனம் இயக்கம்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் குற்றங்களை காவல்துறைக்கு எளிதாக தெரியப்படுத்தும் வகையில்,'பிங்க் பேட்ரோல் போலீஸ்' என்ற பெயரில், பெண் காவலர்கள் இருசக்கர ரோந்து வாகனம் துவக்கப்பட்டது. ஊட்டி நகரில் மக்கள் அதிகமாக கூடும் மார்க்கெட், உழவர் சந்தை, பஸ் நிலையம் மற்றும் சுற்றுலா மையங்களில் இருசக்கர வாகனத்தில் பெண் காவலர்கள் ரோந்து சென்று அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒலி பெருக்கி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். ஊட்டி நகரத்தில், 3; ஊரக பகுதியில், 2; குன்னுாரில் 2; கோத்தகிரியில், 1; கூடலுாரில், 2 வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை துவக்கி வைத்து, கோவை மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ''இந்த வாகனங்களில் செல்லும் பெண் காவலர்கள் பள்ளி தொடங்கும் போதும், முடியும் போதும், அந்தந்த பகுதிகளுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். காலை, 8:00 மணி முதல், 11:00 மணி வரையிலும்; மாலை, 3:00 மணி முதல், 7:00 மணி வரையிலும் ரோந்து பணியில் ஈடுபடுவர். இந்த ரோந்து வாகனம் வாயிலாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாகும்,'' என்றார். எஸ்.பி.,நிஷா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை