உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / எரியாத ஹைமாஸ் விளக்குகள் அடிக்கடி இருளில் மூழ்கும் குன்னூர்

எரியாத ஹைமாஸ் விளக்குகள் அடிக்கடி இருளில் மூழ்கும் குன்னூர்

குன்னுார்:குன்னுாரில் 'ஹைமாஸ்' விளக்குகள் எரியாத நிலையில், குன்னுார் நகரம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி சார்பில், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் 'ஹைமாஸ்' விளக்குகள் பொருத்தப்பட்டன.இதில், பஸ் ஸ்டாண்ட் உட்பட பெரும்பாலான இடங்களில் இந்த விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன.மேலும், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மற்ற தெரு விளக்குகளும், எரியாததால் டி.டி.கே., ரோடு, ஆட்டோ ஸ்டாண்ட், லெவல் கிராசிங் உள்ளிட்ட பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகின்றன.நகராட்சிக்கு புகார் தெரிவித்தும், நிதிப்பற்றாக்குறை காரணமாக, சீரமைக்கப்படாமல் கால தாமதமாகி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடக்கும் அபாயம் உள்ளது.எனவே, எரியாமல் உள்ள தெரு விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை