காய்கறி கண்காட்சி நிறைவு; சிறந்த அரங்குகளுக்கு பரிசு
கோத்தகிரி; கோத்தகிரி நேரு பூங்காவில் நடந்த காய்கறி கண்காட்சி நிறைவு விழாவில், சிறந்த அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கோத்தகிரி நேரு பூங்காவில், கோடை விழாவின் முதல் நிகழ்வாக, 13 வது காய்கறி கண்காட்சி நடந்தது. மொத்தம், 2.5 டன் எடை கொண்ட காய்கறிகளில் பல்வேறு உருவ அமைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டுக்களித்தனர்.நேற்று நடந்த நிறைவு விழாவில், சிறந்த காய்கறி அரங்குகள், வீட்டு தோட்டம் மற்றும் சிறந்த இயற்கை விவசாயி கீதா குணாளனுக்கு பரிசு வழங்கப்பட்டது.மாவட்ட கூடுதல் கலெக்டர் கவுசிக் தலைமை வகித்து, 9 சுழற்கோப்பைகள், 10 முதல் பரிசுகள், 6 இரண்டாம் பரிசுகள் மற்றும் 60 சிறப்பு பரிசுகள் வழங்கி, விவசாயிகளை பாராட்டினார்.சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக, தோட்டக்கலை மற்றும் சுற்றுலா துறை சார்பில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.நிகழ்ச்சியில், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, நகர் மன்ற தலைவர் ஜெயக்குமாரி உட்பட பலர் பங்கேற்றனர்.