மேலும் செய்திகள்
ஞானவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
09-Nov-2024
கூடலுார்; மசினகுடி, ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.மசினகுடி ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழா, 15ம் தேதி துவங்கியது. தீர்த்த மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8:45 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம் பூஜை, ஸ்ரீமகாகணபதி ஹோமம், தீபாராதனை, விநாயகருக்கு அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக வேள்வி, மகா பூர்ணாஹிதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை, 6:45 மணிக்கு மங்கள இசையுடன் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள், கலசங்கள் ஆலயத்தை சுற்றி வரும் நிகழ்ச்சியுடன், 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜைகள் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
09-Nov-2024