உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விநாயகர் விசர்ஜன விழா வழி முறைகள் அறிவிப்பு

விநாயகர் விசர்ஜன விழா வழி முறைகள் அறிவிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யும் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்வதற்காக, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல் படி, www.tnpcb.gov.inஎன்ற இணைய தளத்தில் இருப்பது போல, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ், தெர்மாகோல்’ கலவையற்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும். சிலைகளில் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றையும், பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கூடாது சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு, நச்சு மற்றும் மட்காத ரசாயனம், எண்ணெய் வண்ண பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாகக் கொண்ட வண்ண பூச்சுகளை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த மக்கக்கூடிய நச்சுக்கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும். அலங்கார ஆடைகள், இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின் படி சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில், பாதுகாப்பாக விழாவை கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்