உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குளக்கரையில் குப்பை தன்னார்வலர்கள் புகார்

குளக்கரையில் குப்பை தன்னார்வலர்கள் புகார்

அன்னுார்:அன்னுார் குளக்கரையில் தூய்மை செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் குப்பைகள் கொட்டப்பட்டதால் தன்னார்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.அன்னூரில் 119 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் குளம் உள்ளது. இந்த குளத்தில் ஒன்றரை ஆண்டாக ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிப்பு பணி நடந்து வருகிறது. குளத்தின் தென்கிழக்கு பகுதியில் 400க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு தற்போது பூக்கள் மலர்ந்து வருகின்றன.இந்நிலையில் நேற்று மாலை துாய்மைப்படுத்தப்பட்ட இடத்தில் சிலர் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி போட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தன்னார்வலர்கள் இது குறித்து பேரூராட்சி அலுவலகத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குப்பைகளை கொட்டியோர் மற்றும் கொண்டுவந்த வாகனத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி