உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

அரசு பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

கூடலுார்:கூடலுாரில் 'ரெப்கோ' வங்கி தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளிகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், கம்ப்யூட்டர் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி, கூடலுார் 'ரெப்கோ' வங்கியில் நடந்தது. வங்கி உதவி மேலாளர் ஜெயபிரகாஷ் வரவேற்றார். விழாவுக்கு வங்கி மேலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். வங்கி பேரவை பிரதிநிதிகள் கலைச்செல்வன், ஞானபிரகாசம் ஆகியோர் அறக்கட்டளையின் திட்டங்கள் குறித்து விளக்கினர். தொடர்ந்து, கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளி, புளியம்பாறை, டி.கே.,பேட்டை, பவனா நகர், 2வது மைல் ஊராட்சி பள்ளிகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், காந்திநகர், 11மைல், கீழ்நாடுகாணி, லாரெஸ்டன், புளியாம்பாறை, காந்திநகர் ஊராட்சி பள்ளிகளுக்கு கம்ப்யூட்டரும் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ