உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பஸ் ஸ்டாண்டில் தேங்கிய நீர்; உள்ளூர் பயணிகள் அதிருப்தி

பஸ் ஸ்டாண்டில் தேங்கிய நீர்; உள்ளூர் பயணிகள் அதிருப்தி

கூடலுார்; கூடலுார் பஸ் ஸ்டாண்டில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா அருகே, பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் பிப்., முதல் செயல்பட்டு வருகிறது. ஆனால், பஸ் ஸ்டாண்ட் வளாகம் சீரமைக்கப்படவில்லை. இதனால், பருவமழையின் போது அப்பகுதியில் மழைநீர் தேங்கி பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை சீரமைக்க மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை. கடந்த சில வாரங்களாக மழையின் தாக்கம் குறைந்து இருந்ததால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.இந்நிலையில், தற்போது இரவில் மழை பெய்து வருவதால், பஸ் ஸ்டாண்டில் மழைநீர் தேங்கி பயணிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.பயணிகள் கூறுகையில், 'புதிய பஸ் ஸ்டாண்ட் செயற்பாட்டுக்கு வந்து பல மாதங்கள் ஆகியும், அதன் தரைத்தளம் சீரமைக்கப்படவில்லை. பருவ மழையின் போது தேங்கிய மழை நீர், சேறும் சகதியுமாக மாறியதால் பயணிகள் சிரமத்திற்கு ஆகினர். சில வாரங்களுக்கு பின், தற்போது மழை பெய்து வருவதால், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மீண்டும் மழைநீர் தேங்கி, நடந்து செல்ல சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பஸ் ஸ்டாண்டில் மழைநீர் தேங்குவதை தடுப்பதுடன், அப்பகுதி சீரமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !