மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி துணை மேயர் வழங்கல்
03-Nov-2024
பந்தலுார் ; பந்தலுார் அருகே சேரம்பாடியில், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கூட்டமைப்பின் (ஐ.என்.டி.யு.சி) கூட்டம் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் அணி, மாநில தலைவர் முகமது ஷாஜகான் வரவேற்றார்.மாநில தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார்.கூட்டமைப்பின் தேசிய தலைவர் சுவாமிநாத் ஜஸ்வால், துணைத் தலைவர் சவுத்ரி, பொது செயலாளர் டாக்டர் அமீர்கான், பொருளாளர் டாக்டர் வாசுதேவன், ஒருங்கிணைப்பாளர் ஆம்பூர் சனாவுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், தோட்ட தொழிலாளர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், 'தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தருவோம்,' என, கூட்டமைப்பின் நிர்வாகிகள் உறுதி அளித்தனர். நீலகிரி மாவட்ட, ஐ.என்.டி.யு.சி நிர்வாகிகள்; உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
03-Nov-2024