| ADDED : ஜன 14, 2024 11:06 PM
பந்தலுார்;கூடலூர் வனக்கோட்டத்தில் கோடை காலம் துவங்கும் முன்பே, காட்டு தீ பரவ துவங்கி உள்ளதால் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூர் வனக்கோட்டம் வனம் மட்டுமின்றி, வனத்திற்கு மத்தியிலும் வனத்தை ஒட்டியும் கிராமங்கள், தோட்டங்கள் அமைந்துள்ளது. சமீப காலமாக, வனப்பகுதிகளில் வன விலங்குகளுக்கு தேவையான, உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால், வன விலங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வந்து, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், கோடை காலம் துவங்கும் முன்னரே, சமூக விரோதிகள் வனப்பகுதிகளில் தீ வைப்பதால், வனப்பகுதிகள் அழியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதால், வன விலங்குகளின் வாழ்விடங்கள் மேலும் பாதிக்கப்பட்டு, வனவிலங்கு மனித மோதல்கள், அதிகரிக்கும் நிலை உருவாகி வருகிறது.எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்டுத்தீயை கட்டுப்படுத்த, வனத்துறை சார்பில் கூடுதல் பணியாளர்களை நியமித்து, வனத்தீ பரவ காரணமாகும் சமூக விரோதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.