லாரியில் இருந்து கம்பிகள் சரிந்து குத்தியதில் தொழிலாளி பலி
குன்னுார் -: குன்னுாரில் கட்டட பணிக்காக, லாரியில் இருந்து இறக்கிய கம்பிகள் விழுந்ததில், தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.குன்னுார் மேல் அட்டடி பகுதியை சேர்ந்தவர் பெரியநாயகம் என்கிற குமார்,52. இவர், தொழிலாளர்களுடன் நேற்று மதியம், 2:45 மணியளவில், சிம்ஸ்பார்க் அருகே, கட்டட கட்டுமான பணிகளுக்காக, லாரியில் இருந்த கம்பிகளை 'பிக்--அப்' வாகனத்தில் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பிகள் சரிந்துள்ளது. அதில், குமாரின் தலையில் கம்பிகள் குத்தியதால் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, அவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்பர் குன்னுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு மனைவி ரீனா மற்றும் 15 வயதில் மகன், 9 வயதில் மகள் உள்ளனர்.