உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நல திட்டங்களில் பயன்பெற தொழிலாளர்களுக்கு அழைப்பு

நல திட்டங்களில் பயன்பெற தொழிலாளர்களுக்கு அழைப்பு

குன்னுார்; நீலகிரியில், தொழிலாளர் நல நிதி நலத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.குன்னுாரில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் (அமலாக்கம்) கூறியதாவது : தொழிலாளர் நல நிதி சட்டப்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆண்டு தோறும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக தலா, 60 ரூபாய் தொழிலாளர் நல நிதியை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். நடப்பு ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை, 2025 ஜன., 31க்குள் செலுத்த வேண்டும். நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் கீழ் பல்வேறு நலதிட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.அதில், 'பிரிகேஜி' முதல் பட்ட மேற்படிப்பு வரையிலான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு, 1,000 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை, கல்வி, புத்தக உதவி தொகைகள் ; 10 மற்றும் பிளஸ்- 2 பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இது போன்ற திட்டங்களுக்கு தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை, 'செயலாளர். தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-600 006,' என்ற முகவரிக்கு வரும், 31க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை தொழிலாளர் நல வாரிய அலுவலம் அல்லது www.iwb.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை