உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆபத்தான பயணத்தில் செல்லும் தொழிலாளர்கள்

ஆபத்தான பயணத்தில் செல்லும் தொழிலாளர்கள்

பந்தலுார்; பந்தலுார் பகுதியில் செயல்படும் தோட்ட நிர்வாகங்கள், பசுந்தேயிலை ஏற்றி செல்லவும் உரம் உள்ளிட்ட தளவாட பொருட்களை கொண்டு செல்லவும், டிராக்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு சில எஸ்டேட் நிர்வாகங்கள், டிராக்டர்களில் பொருட்களை ஏற்றி அதன் மீது, தொழிலாளர்களை ஆபத்தான நிலையில் நிற்க வைத்து அழைத்து செல்கின்றனர். டிராக்டர் வேகமாக சென்று சற்று நிலை தடுமாறினாலும், ஆபத்து ஏற்படும்.எனவே, இது போன்ற பயணங்களை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ