உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உன் அப்பன் வீட்டு வண்டியா அரசு பஸ் டிரைவர் அடாவடி

உன் அப்பன் வீட்டு வண்டியா அரசு பஸ் டிரைவர் அடாவடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார் அரசு போக்குவரத்து கழக கிளை ஓட்டுனர் பன்னீர்செல்வம். இவர் பந்தலுார் மற்றும் பாட்டவயல் வழியாக, மாநில எல்லையான அய்யன் கொல்லி செல்லும் அரசு பஸ்சை ஓட்டினார்.நேற்று முன்தினம் மாலை, கூடலுாரில் இருந்து அய்யன்கொல்லி சென்றபோது, ஒரு பஸ் நிறுத்தத்தில், பெண் பயணி ஒருவர் குழந்தையுடன் நின்று கையை நீட்டி, நிறுத்துமாறு கூறியுள்ளார்.டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றார். பின்னால் வந்த ஆட்டோவில் ஏறி, அய்யன்கொல்லி சென்ற அந்த பெண், பஸ் டிரைவரிடம், 'நான் பஸ்சை நிறுத்துமாறு கூறி கை காட்டினேன்; ஏன் நிறுத்தவில்லை' என, கேட்டுள்ளார்.அப்போது, பன்னீர்செல்வம், அந்த பெண்ணிடம், 'கை காட்டினால் பஸ்சை நிறுத்த முடியாது; இது உன் அப்பன் வீட்டு வண்டியா?' என, தரக்குறைவாக பேசி உள்ளார்.இதை, 'வீடியோ' எடுத்த சிலர் சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். அரசு பஸ் டிரைவர் மீது, நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.கூடலுார் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் அருள் கண்ணன் கூறுகையில், ''டிரைவரின் ஒழுங்கீன செயல் குறித்து, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Raa
ஜன 08, 2024 13:55

மன்னனான எவ்வழியோ அவ்வழியே மக்களும், டிரைவரும்


gayathri
ஜன 08, 2024 10:28

இங்கு பதிவிடப்பட்டு இருக்கும் பெரும்பான்மையான கருத்துக்கள் அரசியல்வாதிகளின் கருத்து போலவே உள்ளது


Matt P
ஜன 08, 2024 01:15

ஸ்டாலின்ன் மொவன் மட்டும் அப்பன் வீட்டு பணமா? என்று கேட்கலாம். ஓட்டுனருக்கு அந்த உரிமை இல்லையா?ஓட்டுனரின் மீது நடவடிக்கை எடுத்தால் உதயநிதியின் மீது நடவடிக்கை எடுப்பது தான் சரி. ..ஆள்பவர்களின் வழியில் அலுவலர்களும் அதிகாரிகளும். ..எப்படி இருந்தாலும் அந்த பெண்ணின் நியாயமான கோரிக்கையை வரவேற்கலாம். இது அடுத்த ஓட்டுனர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.


kulandai kannan
ஜன 07, 2024 21:30

ஆனாலும் இந்த பஸ் டிரைவர், உதயநிதி அளவுக்கு தரம் தாழ்ந்திருக்க வேண்டாம்.


வாய்மையே வெல்லும்
ஜன 07, 2024 20:10

அமைச்சர் மேடையில் தான் ஓஷி பஸ் விளம்பரம்.. நிஜத்திலோ.. பெண்களுக்கு பேருந்து வழித்தடங்களில் நிற்பதே இல்லை.. அரசு சொல்வது ஒன்னு அனால் நிஜத்தில் நடப்பதோ வேறொன்று .. இது தான் விடியாமூஞ்சி அரசு லட்சணங்கள்


Raghavan
ஜன 07, 2024 18:47

சாரி அம்மா நான் உங்களை கவனிக்கவில்லை என்று ஒரு சொல் சொல்லியிருந்தால் இந்த வம்பே இருக்காது. தமிழகத்தில் சாரியை நாம் கேட்டுத்தான் வாங்கவேண்டும். இது திராவிட மாடல் நாங்கள் என்றைக்கும் மன்னிப்பதே கேட்கமாட்டோம்


ராஜா
ஜன 07, 2024 15:45

சென்னையில் பேருந்து ஒட்டும் ஓட்டுனர்கள் பாதிப்பேர் முக்கால் ரவுடிகளாக தான் இருக்கின்றனர். காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும்.


ஆரூர் ரங்
ஜன 07, 2024 13:09

இளவுஅரசன் எவ்வழி மக்கள் அவ்வழி.


Godyes
ஜன 07, 2024 12:47

பஸ் நிறுத்துமிடங்களில் ஒன்றிரண்டு பேர் நின்றிருந்தால் பஸ்ஸில் நிறுத்துவதில்லை. சில நேரங்களில் தள்ளி சென்று நிறத்தி ஏற வருபவரரை ஓடிவந்து ஏற விடுகிறார்கள் அந்த பெண் பஸ் நிறுத்துமிடத்தில் தான் நின்று கைகாட்டி உள்ளது.


Rajarajan
ஜன 07, 2024 11:17

இதுவே தனியார் போக்குவரத்தாக இருந்தால், இந்நேரம் பொதுமக்கள் பின்னி பெடலெடுத்து இருப்பார்கள்.


மேலும் செய்திகள்