சுருக்கு கம்பியில் சிக்கி கரடி பலி வாலிபர் கைது
கோத்தகிரி: கோத்தகிரியில், சுருக்கு கம்பியில் சிக்கி, கரடி இறந்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கட்டப்பட்டு வனச்சரகம், தீனட்டி செல்லும் சாலையின் அருகே உள்ள எஸ்டேட்டுக்கு சொந்தமான இடத்தில், சோலார் மின்வேலி கம்பியில் கரடி ஒன்று சிக்கி இறந்ததாக, வனத்துறைக்கு தகவல் வந்தது. அப்பகுதியில், ரேஞ்சர் மற்றும் வன குழுவினர் ஆய்வு செய்தனர். வன அதிகாரிகள், தன்னார்வலர்கள் முன்னிலையில், முதுமலை புலிகள் காப்பக உதவி கால்நடை அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார். உடல் உறுப்பு மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. அதன் உடல் எரியூட்டப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணைக்கு பின், சுருக்கு வைத்த, விக்ரம்குமார், 23, என்பவர் கைது செய்யப்பட்டார்.