மேலும் செய்திகள்
கார் விபத்தில் பெண் உயிரிழப்பு
28-Dec-2025
மழைக்கு ஒழுகும் வகுப்பறை பள்ளி மாணவர்கள் அவதி
02-Dec-2025
தப்பிய போக்சோ கைதி கேரளாவில் கைது
29-Nov-2025
கைதி தப்பி ஓட்டம்; 2 போலீசார் சஸ்பெண்ட்
25-Nov-2025
பெரம்பலூர்: பெரம்பலூர் எம்.எல்.ஏ., இளம்பை தமிழ்செல்வன் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டுப்போட்டு வெற்றி பெற வைத்த வாக்காளர்களை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ., இளம்பை தமிழ்செல்வன் தனது தொகுதிக்கட்பட்ட பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான துறைமங்கலம் ஒளவையார் தெரு, வாசுகி தெரு, தீரன் நகர், 7வது வார்டு, 14வது வார்டு, 15வது வார்டு, 16வது வார்டு பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் தினசரி மார்க்கெட் பகுதிகளில் எம்.எல்.ஏ., இளம்பை தமிழ்செல்வன் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, முதியோர், ஆதரவற்றோர், உடல் ஊனமுற்றோர் உதவித்தொகை வழங்க வேண்டும், மழை காலங்களில் சேறும், சகதியுமாக நடக்கவோ அல்லது வாகனங்களில் செல்லவோ முடியாத நிலையில் உள்ள தீரன் நகர் தெருவை தார்சாலை அமைத்து தர வேண்டும்.குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
அனைத்து மனுக்கள் மீதும் 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தெருவிளக்கு, சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெரம்பலூர் எம்.எல்.ஏ., இளம்பை தமிழ்ச்செல்வன் உறுதியளித்தார்.நிகழ்ச்சிகளில் நகர செயலாளர் ராமச்சந்திரன், நகர துணை செயலாளர்கள் சுப்ரமணியன், மகேஸ்வரி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், இளைஞர் பாசறை செயலாளர் பூபதி, பெரம்பலூர் தொகுதி செயலாளர் ராஜேந்திரன், நகர இணை செயலாளர் சிவக்குமார், நகர இளைஞரணி செயலாளர் போஸ் என்கிற ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
28-Dec-2025
02-Dec-2025
29-Nov-2025
25-Nov-2025