உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / துணை தாசில்தார் சஸ்பெண்ட்

துணை தாசில்தார் சஸ்பெண்ட்

பெரம்பலுார்: பெரம்பலுாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு, தடையின்மை சான்று பெற, திருமண மண்டபத்தின் மேலாளர் துரைராஜ், 55, பெரம்பலுார் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு, 20,000 ரூபாய் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியர் பழனியப்பன் மற்றும் கீழக்கரை வி.ஏ.ஓ., நல்லுசாமியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த பழனியப்பன் தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் சேர்ந்த தாசில்தார் சரவணனிடம், பழனிப்பன் தப்பியோடியது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விளக்கம் பெற்றனர். அதன்படி, துணை தாசில்தார் பழனியப்பனை, சஸ்பெண்ட் செய்து பெரம்பலுார் கலெக்டர் கற்பகம் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி