மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
ஓசி மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
14-Sep-2025
பெரம்பலுார்:'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு நவ., 23ம் தேதி முதல்வர் அறிவித்தார். தமிழக முழுதும் ஜன., 31ம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.ஒவ்வொரு கலெக்டரும், பிரதி மாதம் மூன்றாவது புதன்கிழமை ஒரு நாள் முழுக்க ஒரு தாலுகாவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபடுவர் என தமிழக அரசு அறிவித்தது. பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் கற்பகம், அரசின் நோக்கத்தை சரியாக புரிந்து கொண்டு, இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.காலை 7 மணிக்கு கிராமத்துக்கு போகும் இவர், அடுத்த நாள் காலை 9 மணி வரை கிராமத்தில் தங்கி, காலை உணவு திட்டம், பால் சொசைட்டியில் ஆய்வு, கிராமங்களில் தெரு விளக்கு, குடிநீர், சாக்கடை கழிவு நீர் வாய்க்கால் போன்ற அடிப்படை வசதிகளை நேரில் ஆய்வு செய்து உடனே நடவடிக்கை எடுக்கிறார்.இரவு தங்கும் கலெக்டர் கற்பகம் பொதுமக்களிடம் சகஜமாக பேசி பழகி, அவர்கள் வைக்கும் கோரிக்கைகள், தனி நபர் பிரச்சனைகள், பொதுமக்களின் கோரிக்கைள் உடனடியாக தீர்த்து வைக்கிறார். நீண்ட நாள் தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழிமுறைகளை கூறி உரிய நடவடிக்கை எடுக்கிறார்.விவசாயிகள், விதவைகள், ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கும் இருளர், நரிக்குறவர், பட்டியல் சமூக மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தருகிறார். பட்டா, பாத பிரச்சனை, ஓ.ஏ.பி., போன்ற பிரச்னைகள களத்திலேயே தீர்வு காண்கிறார்.அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார். கலெக்டர் எளிமையாக பழகுவதால் மக்களும் தங்களின் பிரச்னை, கோரிக்கையை இவரிடம் நேரில் கூறி பயன்பெற்றுக் கொள்கின்றனர்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025
14-Sep-2025