மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
ஓசி மது கேட்டவரை கொலை செய்து உடலை எரிக்க முயற்சி
14-Sep-2025
பெரம்பலுார்: அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மாவட்டம், திருவட்டாறு டிப்போவுக்கு சொந்தமான டி.என்., 74- - 1805 என்ற எண் கொண்ட பஸ், நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு, திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை செல்வகுமார், 45, என்பவர் ஓட்டினார்.அந்த பஸ்சில், கன்னியாகுமரி மாவட்டம், பொன்மனை சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த கவுண்டப்பன், 42, என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். பயணியரிடம் அவர் வசூல் செய்த பணம், 27,200 ரூபாயை, தன் பையில் வைத்திருந்தார்.பஸ் நேற்று காலை 6:45 மணிக்கு பெரம்பலுார் புது பஸ் ஸ்டாண்டுக்கு வந்தபோது, பஸ்சை நிறுத்தி விட்டு பஸ்சிலிருந்து கீழே இறங்கி டிரைவரும், கண்டக்டரும் டீ சாப்பிட சென்றனர். பின், கண்டக்டர் கவுண்டப்பன் மீண்டும் பஸ்சில் ஏறி தன் பையை பார்த்தபோது, பையில் வைத்திருந்த, 27,200 ரூபாய் திருடு போயிருந்தது கண்டு திடுக்கிட்டார்.இதுகுறித்து, பெரம்பலுார் போலீசில் அவர் புகார் கொடுத்தார். புகாரின்படி, பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025
14-Sep-2025