உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, ஏரியில் மூழ்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி கணேசன், 35, பலியானார். அரியலுார் புருசோத்தமன் தெருவை சேர்ந்தவர் கணேசன்; ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர், தனக்கு சொந்தமான இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகளை, பெரம்பலுார் மாவட்டம், எளம்பலுார் பகுதியில், பட்டி அமைத்து மேய்த்தார். இன்று (நவ.,17) மதியம், எளம்பலுார் ஏரிக்கு குளிக்க சென்றவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். பெரம்பலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி