உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / உறவினரிடம் ரூ.1.52 கோடி மோசடி செய்தவருக்கு சிறை

உறவினரிடம் ரூ.1.52 கோடி மோசடி செய்தவருக்கு சிறை

பெரம்பலுார்:பெரம்பலுாரில், 1.52 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மளிகை கடை உரிமையாளரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.பெரம்பலுார், கல்யாண் நகரை சேர்ந்தவர் நல்லுசாமி, 31. இவர், தன் உறவினரும், மளிகை கடை உரிமையாளருமான பெரம்பலுார், மேட்டுத்தெரு கணபதி நகரை சேர்ந்த சிவராமலிங்கம், 44, என்பவருக்கு, சில ஆண்டுகளுக்கு முன், 1 கோடியே, 52 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்தார். கொடுத்த கடனை திருப்பித்தருமாறு சிவராமலிங்கத்திடம் நல்லுசாமி பலமுறை கேட்டும் அவர் தர மறுத்து வந்தார்.நல்லுசாமி பெரம்பலுார் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சிவராமலிங்கத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை