குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
பெரம்பலுார்; பெரம்பலுார் மாவட்டம், தெரணி கிராமத்தை சே ர்ந்தவர் நீலகண்டன். இவரது மனைவி கவிதா, 23. இவர்களுக்கு, 8 மாதத்தில் ஆண் குழந்தை இருந்தது. நீலகண்டன் சாலை விபத்தில் சிக்கி, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டார். இந்த சோகத்தில், 10 மாதங்களுக்கு முன், அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்து, இரு மாதங்களுக்கு பின் பிறந்த தன் குழந்தையுடன், இதே கிராமத்தில் உள்ள தன் அண்ணன் கலியபெருமாள் வீட்டில், கவிதா வசித்தார். கணவர் இல்லாமல் குழந்தையை வளர்க்க கவிதா சிரமப்பட்டார். அவர், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பாடாலுார் போலீசார் விசாரிக் கின்றனர்.