பெரம்பலுார்: பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில் வெள்ளி விழா ஆண்டின், முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா, ஸ்டார்ட் அப் வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசுகையில், 'கல்வி நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கா ன மாணவர்களை உருவாக்கி உள்ளது. செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், மின்சார வாகனங்கள், விண்வெளி ஆராய்ச்சி, பயோடெக்னாலஜி, ஏ.ஆர்., வி.ஆர்., எம்.ஆர்., குவாண்டம் கணிப்பொறி, பசுமை மற்றும் நிலைத்தன்மை தொழில் நுட்பங்கள், ஸ்டார்ட் அப் கல்சர் போன்றவை உலகத்தை வழி நடத்துகின்றன. இந்த மாற்றத்துக்கு ஏற்ப உங்களுடைய தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார். பெங்களூரு, சியின்ட் நிறுவன துணைத் தலைவர் பிரமோத் நஞ்சுண்டசாமி, தொழில் நுட்ப உலகில் வேகமாக நடந்து வரும் முன்னேற்றங்கள் குறித்தும், எதிர்காலத்தில் உலகளாவிய வேலைவாய்ப்புகள், தொழில்நுட்ப புதிய பாதைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். சென்னை, அவுட்லையர் கேம்ஸ் நிறுவனர் ஹரிஷ்செங்கையா, டிஜிட்டல் கேமிங், கிரியேட்டிவ் மீடியா மற்றும் புதுமை தொழில் துறைகளில் பெரும் வாய்ப்புகள் குறித்து பேசினார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தின் கூடுதல் பதிவாளர் இளங்கோவன், ஐ.சி.டி., அகாடெமி தமிழ்நாடு மாநிலத் தலைவர் பூர்ணபிரகாஷ், வாழ்த்தி பேசினர். முன்னதாக, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரி முதல்வர் சண்முகசுந்தரம் வரவேற்றார். துணை முதல்வர் அன்பரசன் நன்றி கூறினார். கல்வி நிறுவனங்களின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி நந்தகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் செல்லப்பன், டீன்கள் சண்முகசுந்தரம், ஸ்ரீகேவிஎம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்பு, இன்டெர்னல் குவாலிட்டி அஸ்யுரென்ஸ் செல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.