கல் குவாரி இயந்திரத்தில் சிக்கி வாலிபர் மரணம்
பெரம்பலுார்; திருச்சி மாவட்டம், பொன்மலை பகுதியை சேர்ந்தவர் மதியழகன் மகன் ஹரிஹரன், 27. திருமணமாகாத இவர், பெரம்பலுார் மாவட்டம், திருவளக்குறிச்சியில் உள்ள தனியார் கல் குவாரியில் சூப்பர்வைசராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு, 12:00 மணியளவில் லோடர் இயந்திரத்தில் இருந்து, ஜல்லி கற்கள் லாரிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. லோடு லாரிகளின் பின்புறம், சமமாக ஜல்லிக்கற்களை நிரப்புவதற்காக, லாரி முன்னும், பின்னும் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இதனை ஹரிஹரன் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக பின்நோக்கி வந்த லாரி அவர் மீது மோதியது. தடுமாறிய ஹரிஹரன் லோடர் இயந்திரத்தின் மீது விழுந்து, அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பாடாலுார் போலீசார்விசாரிக்கின்றனர்.