மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், 105வது ஆண்டு லட்சுமிநரசிம்ம ஜெயந்தி விழா உற்சவத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பாகவதர்கள் பஜன் பாடல்கள் மற்றும் ஆராதனைகளில் பங்கேற்றுள்ளனர்.தமிழகத்தில், ஆன்மீகம், பஜன் பாடல்கள் ஆகியவ்றை நாடு முழுதும் பல்வேறு பகுதிகளில் பாமர மக்கள் அறியும் வண்ணம் உணர்த்தியவர் கோபாலகிருஷ்ண பாகவதர் மற்றும் அவரது வழித்தோன்றலான சஞ்சீவி பாகவதர்.இவர்களது பஜன் பாடல்கள் இன்று வரை ஆன்மீக உலகில் தனி இடம் பிடித்துள்ளன. ஆண்டுதோறும் வைகாசி மாதம் லட்சுமிநரசிம்ம ஜெயந்தி உற்சவம் நடந்து வருகிறது.புதுக்கோட்டையில், 105வது ஆண்டு லட்சுமிநரசிம்ம ஜெயந்தி விழா இந்த ஆண்டு கடந்த 22ம் தேதி லட்சுமிநரசிம்ம சுவாமிக்கு சிறப்பு ஆராதனைளுடன் உற்சவம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சீதா கல்யாண உற்சவம் 24ம் தேதி நடந்தது.நேற்று 25ம் தேதி அகண்டராம வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து பங்கேற்றுள்ளனர். இன்று 26ம் தேதி பாகவதர் பூஜை ஆராதனை நடைபெறுகிறது.ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்ம ஜெயந்தி டிரஸ்ட் நிர்வாகி நரசிம்மன் செய்து வருகிறார்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025