| ADDED : மே 28, 2024 05:01 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை கணேஷ்நகர் 1ம் வீதியில் வசிப்பவர் ஜான்தேவசகாயம், 50, புதுக்கோட்டையில் மாலையீடு சர்ச் பாதிரியர். இவரது மனைவி எஸ்தர் எழிலரசி, அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர்கள் இருவரும் ஒரு வாரத்திற்கு முன், கோவையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு சென்று விட்டு, காலை வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 80 சவரன் தங்க நகைகள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.பாதிரியார் வீட்டில், 80 சவரன் நகைகள் திருடப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணேஷ் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.