வயநாடு மக்களுக்காக வசூல் கலெக்டரிடம் வழங்கிய டீக்கடைக்காரர்
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் மொய் விருந்து நடத்தி, வயநாடு மக்களுக்கு வசூல் செய்த பணத்தை டீக்கடை உரிமையாளர் மாவட்ட கலெக்டரிடம் டி.டி.,யாக வழங்கினார். புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி மற்றும் வம்பன் நால்ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர். சிவக்குமார் இவர் கஜா புயல், கொரோனா உள்ளிட்ட பல இக்கட்டான காலகட்டங்களில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மொய் விருந்து விருந்து நடத்தி நிதி அளித்து வருகிறார்.அதேபோன்று, வயநாடு பகுதி மக்களுக்கு உதவி அளிக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது டீக்கடைகளில் மொய் விருந்து விருந்து நடத்தினார். அன்றைய தினம் தனது டீக்கடைக்கு டீ சாப்பிட வருபவர்களுக்கு இலவசமாக டீ வழங்கி, அவர்களால் முடிந்த தொகையை மொய் பாத்திரத்தில் மொய் செலுத்த வைத்தார்.அதன்படி, அன்றைய தினம் 43 ஆயிரத்து 200 ரூபாய் டீக்கடையில் மொய் விருந்தாக வசூலானது. அந்த பணத்தை டி.டி.,யாக எடுத்து, வயநாடு பகுதி மக்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அருணா-விடம்வழங்கினார். இக்கட்டான காலகட்டங்களில் இவருடைய மனிதாபிமான செயலுக்கு பலர் பாராட்டினர்.