உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / எல்லை தாண்டி மீன் பிடித்த நான்கு மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்த நான்கு மீனவர்கள் கைது

புதுக்கோட்டை:ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் நான்கு பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டனத்தில் இருந்து நேற்று காலையில், 40 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், நூற்றுக்கு மேற்பட்ட மீனவவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.இதில், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த வீரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், சரண், 24: பாலா, 29: கணேசன், 32: பரமசிவம், 51: ஆகிய நான்கு மீனவர்கள் நேற்று இரவு நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நான்கு மீனவர்களையும் கைது செய்து, இவர்களிடம் விசாரணை செய்வதற்காக, காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை