உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / ஆர்.டி.ஓ.,வை கொல்ல முயன்ற இருவருக்கு குண்டாஸ்

ஆர்.டி.ஓ.,வை கொல்ல முயன்ற இருவருக்கு குண்டாஸ்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கிளிக்குடி பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக கடந்த மாதம் 13ம் தேதி கிடைத்த தகவலின்படி, அந்த பகுதியில் சோதனை நடத்த இலுப்பூர் ஆர்.டி.ஓ., தெய்வநாயகி உள்ளிட்டோர் காரில் சென்றனர்.தொடர்ந்து, வளையபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே ஆற்று மணல் ஏற்றி வந்த ஒரு லாரியை ஆர்.டி.ஓ., தடுக்க முயன்றார். அப்போது, லாரியை நிறுத்தாத டிரைவர் சங்கர், 40, ஆர்.டி.ஓ., கார் மீது மோதினார். அப்போது, லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். புகாரின்படி, அன்னவாசல் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து டிரைவர் சங்கர் மற்றும் லாரி உரிமையாளர் சுந்தரம், 47, ஆகியோரை கைது செய்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா உத்தரவின்படி, நேற்று லாரி உரிமையாளர் சுந்தரம் மற்றும் டிரைவர் சங்கர் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி