மேலும் செய்திகள்
மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி
26-Nov-2024
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி புளியஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் பைசூர் ரகுமான், 30; பணியாளர். இவரது மனைவி ஜகுபர் நிஷா, 23 தம்பதிக்கு 3 வயதில், ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.ஓரிரு நாட்களுக்கு முன் ஜகுபர் நிஷா தன் கணவர் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜகுபர் நிஷா வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.காயங்களுடன் அவர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். மருத்துவ மனைக்கு துாக்கிச் செல்லப்பட்ட அவர், ஏற்கனவே இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.இதுகுறித்து, அந்த பெண்ணின் கணவர் பைசூர் ரகுமானிடம் கறம்பக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Nov-2024