மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை:'புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டு, 19 கோடி ரூபாயில் ஒப்பந்த புள்ளி கோரப்பட்ட நிலையில் விரைவில் கட்டுமான விரைவில் துவங்க வேண்டும்' என பொதுமக்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில் தொன்மை வாய்ந்த மாவட்டங்களில் ஒன்றாக புதுக்கோட்டை உள்ளது. புதுக்கோட்டையில் நாளுக்கு நாள் மக்கள் பெருக்கமும், மற்றொரு புறம் நகராட்சி, மாநகராட்சியாக தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விரிவாக்க பகுதிகளில் உள்ள ஊராட்சிகள் இணைப்புக்கு உள்ளாகியுள்ளன.மேலும், நகரின் வளர்ச்சி மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் இணைப்பு மாவட்டமாக, புதுக்கோட்டை விளங்கி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டு, 1981-ம் ஆண்டு திறக்கப்பட்டது. தற்போது, இந்த பஸ் ஸ்டாண்டில் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் கான்கிரீட் சிமென்ட் பூச்சு பெயர்ந்து காணப்படுகிறது. மேற்கூரையில் இடிந்து விழ துவங்கியுள்ளது.இங்கு, 72 கடைகள் உள்ளன. பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் பாதுகாப்பு கருதி சிறப்பு நிதி ஒதுக்கீடு பெற நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேருவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலை பெற்று, 19 கோடி நிதி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து, அதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்ட நிலையில் பொதுத்தேர்தல் காரணமாக தள்ளி போனது. தற்போது பணிகள் துவங்குவதற்கான ஆயத்த வேலைகள் புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள துவங்கியுள்ளது.ஆகையால், இந்த பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகளை விரைவில் துவங்கி கட்டடத்தை தரமானதாகவும் கட்டி முடிக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாகும்.இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டு கட்டடம்முழுதையும் இடித்து விட்டு புதிதாக கட்டப்பட உள்ளது.'இதற்கிடையில் பணிகளை விரைவாக துவங்கி முடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்' என்றனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025