| ADDED : ஜூலை 08, 2024 06:37 AM
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மருதங்கோன்விடுதி பகுதியைச் சேர்ந்த கருணாநிதி, 40, என்பவர் மனைவி மாரிக்கண்ணு, 35. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் அடையாளம் தெரியாத ஐந்து பேர் கும்பல் மாரிக்கண்ணு கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் அணிந்து இருந்த 8 சவரன் தாலி செயினை பறித்து, தப்பி ஓடி விட்டனர்.தொடர்ந்து, அதே பகுதியில் வசிக்கும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஸ்ரீதர் என்பவர் மனைவி ஷீலா, 32, என்பவரையும், தாக்கி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தாலி செயினையும் பறித்து தப்பினர். இதற்கு முன்னும் சிலரிடம், மர்ம கும்பல் செயின் பறித்துள்ளது.இது குறித்து, அப்பகுதியினர் கறம்பக்குடி போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் விசாரணை செய்து, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதிருப்தி அடைந்த மக்கள், நேற்று கந்தர்வகோட்டை - - பட்டுக்கோட்டை சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.