மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே குன்னத்துார் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கலியமங்கலம் கிராமத்தில் செயல்படும் தனியார் மதுபான ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, தே.மு.தி.க.,வினர் போராட்டம் நடத்தினர். தே.மு.தி.க., விராலிமலை ஒன்றிய கழகம் சார்பாக, வடக்கு மாவட்டச் செயலர் கார்த்திகேயன் தலைமையில் ஊர்வலமாக, மதுபான ஆலையை நோக்கி சென்றனர்.தொடர்ந்து ஆலையை முற்றுகையிட முயன்றபோது, போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், தே.மு.தி.க.,வினரை கைது செய்து, ஆவூர் தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்து வைத்தனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025