உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / அரசு ஒப்பந்தம் பெறுவதற்கு போலி சான்று 3 பேருக்கு சிறை

அரசு ஒப்பந்தம் பெறுவதற்கு போலி சான்று 3 பேருக்கு சிறை

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர்கள் ரங்கநாதன், 50, தனசேகரன், 49, சேதுராமன், 50. இவர்கள், சுனாமி மறுவாழ்வு பணிகளுக்காக விடப்பட்ட அரசு ஒப்பந்தங்களை பெற, போலியாக வங்கி உத்தரவாத பத்திரங்களை கொடுத்து, அரசை ஏமாற்றியதாக, சுனாமி மறுவாழ்வு திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டு, 2010ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பு கூறினார்.ரங்கநாதன், தனசேகரன், சேதுராமனுக்கு 2 ஆண்டு சிறை, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை