உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / கோட்டாட்சியர் கார் மோதியது: பைக்கில் சென்ற இருவர் உயிரிழப்பு; புதுக்கோட்டையில் துயரம்

கோட்டாட்சியர் கார் மோதியது: பைக்கில் சென்ற இருவர் உயிரிழப்பு; புதுக்கோட்டையில் துயரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: நமணசமுத்திரம் அருகே புதுக்கோட்டை ஆர்.டி.ஓ., கார் மோதி இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.புதுக்கோட்டை ஆர்.டி.ஓ.,(வருவாய் கோட்டாட்சியர்) ஐஸ்வர்யா. இவர் பணி நிமித்தம் திருமயம் சென்று கொண்டிருந்தார். காரைக்குடி - திருச்சி நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் என்ற இடத்தில், கோட்டாட்சியர் சென்ற கார், டூவிலர் மீது மோதியது. இச்சம்பவத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஐஸ்வர்யாவுக்கு காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இறந்தவர்களின் விவரம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. சம்பவம் குறித்து நமனசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.டி.ஓ., கார் மோதி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
செப் 20, 2024 18:43

அ என்ற எழுத்துக்கு அம்மா என்று கற்றுக்கொடுத்தார்கள் ஆனால் இன்று அ என்ற ஒரு எழுத்து எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டது . அந்த அளவுக்கு எல்லாவற்றிலுமே விவேகமற்ற வேகம், மேலும் "அ " வண்டியில் அமர்ந்தவுடனேயே ஓட்டுநர் வானத்தில் ஓட்டுவதாக ஊட்டுவதாக நினைத்துக்கொண்டு எதைப்பற்றுய்யுமே சிந்திக்காமல் செல்வதுதான் இன்றைய நிலை, அதிலும் அரசாங்க முத்திரை பொதிந்த அடையாளத்துடன் வரும் வாகனம் , அவைகள் பின்னால் வரும் பல நூறு கார்களின் வேகம் இவைகளை பார்த்தல் தினமுமே முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடமெல்லாம் கார் ரேஸ் நடக்கிறதோ என்று தோண்டும் அளவுக்கு இருக்கிறது . விபத்தில் இறந்தால் , இவர்களுக்கு என்ன ஆகப்போகிறது, இதற்க்கு ஒரே வழி பொதுமக்களோடு மக்களாக மக்கள் பயணிக்கும் பேருந்துகளில் மற்றும் ரயில்களில் இவர்களை பயயணம் செய்ய அனுமதிக்க வேண்டும், போதுதான் மக்களின் பிரச்சனைகள் என்ன என்று தெரியும், நான் பதிவு செய்த இந்த உரையை வாழ்வில் கடைபிடித்தவர் என்னுடைய நண்பர் என்று கூறுவதை விட நான் அவருடைய விசிறி , திரு சி எல் ராமகிருஷ்ணன் முன்னாள் காவல் துறைத் தலைவர், தற்போதுதான் ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒவ்வொரு தலைவர்கள் நியமிக்கப்பட்டு விட்டார்கள், அவர் பதவியில் இருந்தபோதும் சரி இப்பவும் பஸ் மற்றும் இரயிலில் அதுவும் பொதுமக்களோடு மக்களாக எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சாதாரண பயணி போல் கண்ணுடைய உடமைகள் தானே சுமந்து வருகிறார், இதுதான் மக்களாட்சி, வந்தே மாதரம்


வாய்மையே வெல்லும்
செப் 20, 2024 15:54

அரசு வண்டி என்றால் அதிவேகம் எடுத்து ஓட்டுவது தானே தமிழக அரசு ஆட்களின் பழக்க வழக்கம். இவங்க ரோட்டுல வந்தால் ஒரு ஈ காக்க வரக்கூடாது. அதையும் மீறி வந்தால் ஓவெர்டேக் செஞ்சு சிட்டாக பரந்து பாய்ஞ்சு போயிட்டே இருப்பாங்க. இப்போ பாருங்க இந்தமாதிரி தாருமாராக ஓட்டி இரண்டுபேரும் டிக்கெட் கொடுத்துவிட்டார்கள்


Ramesh Sargam
செப் 20, 2024 12:09

ஆர்.டி.ஓ., வுக்கு லஞ்சம் ஏதாவது பாக்கி வைத்தனரா அந்த இருவரும், என்கிற கோணத்திலும் விசாரிப்பது சிறந்தது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை