| ADDED : செப் 11, 2011 12:56 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அண்ணாத்துரை பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
மாவட்ட விளையாட்டுத் துறை சார்பில் வரும் 15ம் தேதி காலை ஏழு மணிக்கு
மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி நடக்கிறது.இரண்டு பிரிவுகளாக நடைபெற
உள்ள இப்போட்டியில் 10 வயதுக்கு மேல் 17 வயதுகுட்பட்ட மாணவ, மாணவிகள்
பங்கேற்கலாம். மாணவர்கள் பிரிவில் 13 வயதுகுட்பட்டவர்களுக்கு 15 கி.மீ.,
தூரம், 17 வயதுகுட்பட்டவர்களுக்கு 20 கி.மீ., தூரம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாணவிகள் பிரிவில் 13 வயதுகுட்பட்டவர்களுக்கு 10
கி.மீ., தூரம், 17 வயதுகுட்பட்டவர்களுக்கு 15 கி.மீ., தூரம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டி புதுக்கோட்டை - தஞ்சை மெயின் ரோட்டில் அரசு
முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி முன்பிரிந்து துவங்கும். வெற்றிபெறும்
மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டுத் துறையின் சார்பில் பரிசுகளும்,
சான்றிதழ்களும் வழங்கப்படும்.போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள்
பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து அனுமதி கடிதம் மற்றும் வயது சான்றிதழ்
பெற்று வருதல் வேண்டும். போட்டி துவங்குவதற்கும் ஒருமணி நேரத்துக்கு
முன்பாக பெயர்களை பதிவு செய்ய வேண்டும். சாதாரண வகை சைக்கிளையே பயன்படுத்த
வேண்டும். விபத்துகளுக்கு மாணவர்களே பொறுப்பேற்க வேண்டும்.