உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / புதுகை தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம்

புதுகை தே.மு.தி.க., ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யும் விதமாக ஆற்றவேண்டிய தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.புதுக்கோட்டை மாவட்ட தே.மு.தி.க., அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஜாஹீர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்டச் செயலாளர் சின்னத்துரை, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சண்முகம், குமாரவேல், தே.மு.தி.க., மாவட்ட துணைச் செயலாளர் செந்தில், நகரச்செயலாளர் சிங்கமுத்து உட்பட இருகட்சிகளையும் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜியாவுதீன் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ளாட்சிமன்ற பதவிகளுக்கு போட்டியிடும் தே.மு.தி.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யும் விதமாக தேர்தல் பணிகளில் முனைப்புன் ஈடுபடுவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ