உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / விராலி மலை தேர் திருவிழா விமரிசை

விராலி மலை தேர் திருவிழா விமரிசை

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள சுப்ரமணியசுவாமி கோவில், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாகும். இங்கு அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்து, அஷ்டமா சித்தி வழங்கி திருப்புகழ் பாடச்செய்த தலமாக விளங்கி வருகிறது.மலை மேல் உள்ள சுப்ரமணியசுவாமி, ஆறுமுகங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா, கந்த சஷ்டி விழா, தைப்பூச திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கமாகும்.கடந்த 16ம் தேதி காலை சுப்ரமணியசுவாமி வள்ளி, தெய்வானை மற்றும் கன்னிமூல கணபதி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனையுடன், வேலுடன் சேவல் மயில் கொடி ஏற்றி வைத்து ரக்ஷாபந்தனம் என்ற காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது.நேற்று காலை 10.30 மணிக்கு விநாயகர் சிறிய தேரிலும், சுப்ரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரிலும் எழுந்தருளினார். பின்னர், பொதுமக்கள், பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரின் வடம் பிடித்து, நான்கு ரத வீதிகளின் வழியாக வலம் வந்து மதியம் 1.00 மணிக்கு நிலையை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி