உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் மீன்பிடிக்க படகுகளுக்கு தடை

ராமேஸ்வரத்தில் கடல் சீற்றம் மீன்பிடிக்க படகுகளுக்கு தடை

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப் பட்டது. ராமேஸ்வரம் கடலில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மணிக்கு 55 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறை தடை விதித்தது. மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கவில்லை.ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் தனுஷ்கோடி பகுதியில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இருப்பினும் பாம்பன் ரயில் பாலத்தில் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை