உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஒரே பரம்பரையை சேர்ந்த 80 குடும்பங்கள் : 139 ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன்

ஒரே பரம்பரையை சேர்ந்த 80 குடும்பங்கள் : 139 ஆடுகளை வெட்டி நேர்த்திக்கடன்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் ஒரே பரம்பரையை சேர்ந்த 80 குடும்பத்தினர், 139 ஆடுகள் வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ராமநாதபுரத்தில் கூரிசாத்த அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலை குலதெய்வமாக கொண்ட ஒரே பரம்பரையினர் சிவகங்கை மாவட்டம் பஞ்சலூர், கல்லடி திடல், உதயனூர், வடவிருக்கை, அரியாங்கோட்டை, நானாமடை, ஏந்தல் ஆகிய கிராமங்களில் உள்ளனர். இந்த 80 குடும்பத்தினரில், 750க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கூரி சாத்த அய்யனார்கோயிலில் பொங்கல் வைத்து, ஆடு வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

இந்த விழா நேற்று முன்தினம் நடந்தது. மாலை முதல் நள்ளிரவு வரை 139 ஆடுகள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறவினர்கள் பங்கேற்றனர். கல்லடி திடல் தலைமை பூசாரி சின்னதம்பி கூறியதாவது : ஒரு குடும்பத்துக்கு இரண்டு முதல் மூன்று ஆடுகள் வரை நேர்த்திகடன் செலுத்தி வெட்டுவர். எத்தனை ஆடுகள் வெட்டினாலும், அவற்றை மொத்தமாக வைத்து, 80 பங்குகள் வைத்து, பங்காளிகள் ஆளுக்கு ஒன்றாக பிரித்து, சமைத்து சாப்பிடுவர். இதில்தான் அவர்களின் ஒற்றுமை விளங்கும். மூன்று ஆண்டிற்கு ஒருமுறை இந்த விழா நடக்கிறது. இங்கு வெட்டப்படும் ஆட்டின் இறைச்சியை வீட்டுக்கு எடுத்து செல்வதில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை