உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கழிவறையாக மாறும் கண்மாய்

கழிவறையாக மாறும் கண்மாய்

சத்திரப்பட்டி : சத்திரப்பட்டியில் ஆண்களுக்கான கழிவறை இல்லாததால் மழைகாலத்தில் மெயின்ரோடும் கழிவறையாக மாறுகிறது. சத்திரப்பட்டி , அய்யனாபுரம் மற்றும் சுற்று பகுதிகளில் பெண்களுக்கென தனி கழிவறை வசதி உள்ளது. ஆண்களுக்கென வசதி இல்லை. நடுத்தர மற்றும் கூலி தொழிலாளர்கள் அதிகமாக உள்ள இப்பகுதியில், வாகைகுளம் கண்மாயை திறந்த வெளி கழிவறையாக பயன்படுத்துகின்றனர். கோடைகாலத்தில் இதனால் பிரச்னை இல்லை என்றாலும், மழைகாலங்களில் கண்மாய்க்கு தண்ணீர் வரும்போது சிக்கல் ஏற்படுகிறது. கொசு தொல்லை மற்றும் பலவித தொற்றுநோய்களால் மக்கள் பாதிக்கின்றனர்.

மேலும் கண்மாயில் தண்ணீர் நிரம்பியதும், நத்தம்பட்டி, ஆலங்குளம் ரோடோரப்பகுதி கழிவறையாக மாறுகிறது. மெயின்ரோடான இப்பகுதி வழியாக மில்ஊழியர்கள், விசைத்தறி தொழிலாளர்கள்தான் செல்கின்றனர். இந்த ரோடுகளை கடக்கும்போதும் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.ஆண்கள் கழிவறை கட்ட ராஜபாளையம் ஒன்றிய கூட்டத்தில் இருமுறை தீர்மானம் நிறைவேறியும், அரசுநிலம் இல்லாமல் கழிவறை கட்டமுடியாத நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ