மேலும் செய்திகள்
தேங்கிய மழைநீர்: மாணவர்கள் அச்சம்
10 hour(s) ago
இலவச மருத்துவ முகாம்
10 hour(s) ago
கடலில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு நிவாரண உதவி
10 hour(s) ago
இன்று புதிய வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
10 hour(s) ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், கப், கவர்கள் தாராளமாக புழக்கத்தில் உள்ளன. குறிப்பாக நீர்வரத்து வாய்க்கால்கள், காலி பிளாட்களில் குவிந்துள்ளன. மண் வளத்திற்கும், நிலத்தடி நீருக்கும் கேடு விளைவிக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு சுற்றுச்சூழல், நிலத்தடி நீருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப், கவர்கள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. சிறு ஓட்டல்கள், கடைகள், மார்க்கெட், பஜார், இறைச்சி கடை ஆகிய இடங்களில் பாலிதீன் பைகளை தாராளமாக பயன்படுத்துகின்றனர். இவ்விஷயத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகளின் நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளது. பாலிதீன், பிளாஸ்டிக் விற்பனையை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. குப்பை கொட்டும் இடங்கள், தொட்டிகளில் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடக்கிறது. சில ஊராட்சிகளில் குப்பையை தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் பிற இடங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலி பிளாட்கள், நீர்வரத்து வாய்க்கால்களில் பாலிதீன் குப்பை குவிந்து கிடக்கிறது. எனவே மண் வளத்திற்கும், நிலத்தடி நீருக்கும் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் குப்பையை அகற்ற வேண்டும்.தடையை மீறி பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவர்கள், பயன்படுத்தும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.---
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago