உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் சிரமம்

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் சிரமம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது முதல் தொடர்ந்து அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வரும் நிலையில் கூடுதல் வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர் .செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்தியனேந்தல், தட்டானேந்தல், ஆனைசேரி, கீரனுார், செல்வநாயகபுரம் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 420க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லெட்சுமணன் கூறியதாவது: செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு தொடர்ந்து அரசுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை வசதி இல்லை. பள்ளிக்கு தனியாக பாதை வசதி இல்லாததால் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அமைச்சரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளிக்கு தேவையான வகுப்பறை, ரோடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி